இன்றைய ராசிபலன் (04.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: எடுத்த வேலைகள் நடந்தேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். கார்த்திகை 1: உங்கள் விருப்பம் நிறைவேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வரும். ரோகிணி: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: முயற்சிக்குரிய ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். திருவாதிரை: திடீர் வரவால் நெருக்கடி நீங்கும். பிறரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். புனர்பூசம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். உறவுகள் உங்களிடம் உதவிகேட்டு வருவர்.
கடகம்
புனர்பூசம் 4: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: வரவு அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
சிம்மம்
மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பூரம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உத்திரம் 1: வேலையில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு ஏற்படும். வரவு அதிகரிக்கும்.
கன்னி
உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வரும். அஸ்தம்: பிறரது வேலையில் தலையிடாதீர்கள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சித்திரை 1,2: முடியாது என்று மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்.
துலாம்
சித்திரை 3,4: செயல்களால் செல்வாக்கு பெறும் நாள். உங்கள் ஆலோசனையை பிறர் ஏற்பர். சுவாதி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்கள் உதவியால் வேலைகள் முடியும்.
விருச்சிகம்
விசாகம் 4: சாதகமான நாள். தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். அனுஷம்: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கேட்டை: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நினைப்பது நடந்தேறும்.
தனுசு
மூலம்: யோகமான நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திராடம் 1: உழைப்பால் உயர்வு காண்பீர். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பம் அடையும். திருவோணம்: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன்இருப்போரை அனுசரித்துச் செல்லுங்கள். அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.
கும்பம்
அவிட்டம் 3,4: வருமானம் அதிகரிக்கும் நாள். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். சதயம்: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உங்களது புதிய அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும்.
மீனம்
பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.
ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும்.
(வீடியோ இங்கே )