ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று; இலங்கையர்கள் பகுதிச் சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
5 months ago
ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று; இலங்கையர்கள் பகுதிச் சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்பு!

இந்த ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று இலங்கையில் அவதானிக்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் (Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது.

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். 

பகுதி நேர கிரகணம் மாலை 3.20 மணிக்கும், முழு சந்திர கிரகணம் இன்று மாலை 4.45 மணிக்கு தொடங்குகிறது. முழு நிலவாக மாலை 5.10-க்கு காட்சி அளிக்கும். சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். 

தெளிவாக காண தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம். இது ஒரு முழுச் சந்திர கிரகணமாக இருந்தபோதிலும், சந்திரன் அடிவானத்திற்கு (Horizon) கீழே அமைந்திருப்பதால், இலங்கையர்களுக்கு இது ஒரு பகுதிச் சந்திர கிரகணமாகவே காட்சியளிக்கும்.

இன்று மாலை 6:21 மணியளவில் சந்திரன் கிழக்கு அடிவானத்தில் உதிக்கும் போது, நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டிருப்பதை மக்கள் அவதானிக்கலாம்.

மேகமூட்டமற்ற தெளிவான வானம் இருக்கும் பட்சத்தில், கிழக்கு அடிவானம் நன்கு தெரியக்கூடிய உயரமான அல்லது திறந்தவெளியில் இருந்து இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4