கமேனியை ஹீரோ ஆக்க வேண்டாம் என்று மட்டும்தான் சொல்கிறேன். காரணம் உள்ளே....

#America #Attack #Israel #War #Iran #Iraq #Human Rights #Trump #Violence #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4 #IranVsIsrael
Lakhi
2 hours ago
கமேனியை ஹீரோ ஆக்க வேண்டாம் என்று மட்டும்தான் சொல்கிறேன். காரணம் உள்ளே....

ட்ரம்ப் ஒரு பொல்லாத மனிதன் என்பதற்காகக் கமேனி ஒன்றும் புனிதர் அல்ல. ஒருவேளை அமெரிக்கா போன்ற வல்லரசுக்குக் கமேனி அதிபராக இருந்திருந்தால் இவ்வுலகம் இன்னும் பேரழிவுகளையே சந்தித்திருக்கும். 

கமேனி செய்த அட்டூழியங்கள் கணக்கற்றவை. கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கியிருக்கிறார், தன்னை எதிர்த்த அறிவுத்தரப்பை மூர்க்கமாகக் கொன்று அழித்திருக்கிறார், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களைச் சிறையில் அடைத்து தொடர்ந்து சித்திரவதை செய்திருக்கிறார். கமேனி மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைப் பட்டியலிடத் தொடங்கினால் மனசாட்சியுள்ள எந்த மனிதனுக்கும் குலை நடுங்கும். அண்மையில் நடந்த ஈரானிய மாணவர் எழுச்சிப் போராட்டத்தில்கூட ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது உத்தேசமான கணக்கு மட்டுமே. அசல் எண்ணிக்கை முப்பதாயிரத்தைத் தாண்டக்கூடும் என ஊகம் செய்கிறார்கள். கமேனி உருவாக்கிய IRGC (Islamic Revolutionary Guard Corps) படை அவரது சர்வாதிகார ஏவல்களை முழுநேரமும் நிறைவேற்றுவதற்காகவே செயல்பட்ட வன்முறை அமைப்பு. இதுவரை அந்த அமைப்பால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், ஈரானிலுள்ள சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானவர் கமேனி. தனது வல்லாதிக்கத்தை நிறுவுவது மட்டுமே அவரது இலக்கு. அமெரிக்காவை எதிர்த்த ஒற்றைக் காரணத்துக்காக அவர் வரலாற்று நாயகன் ஆகிவிட மாட்டார். அவர் ஷியா பிரிவினரின் தலைவர் என்பதற்கு அப்பால் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கவர் அல்ல என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இவரது ஆட்சிக்காலத்தில் ஈரானில் எந்தப் பொருளாதார முன்னேற்றமும் நடக்கவில்லை. 

அதை முன்னிட்டே மாணவர் போராட்டமும் வலுப்பெற்றது. கமேனியின் இரும்புக்கரத்தால் அது அடக்கப்பட்டபோது பல்லாயிரம் உயிர்கள் பறிபோயிருந்தன. “காட்டுமிராண்டித்தனமாக அவர்களைக் கொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகக்” கமேனி பேசிய காணொளியே இருக்கிறது. கர்மா இப்போது திருப்பி அடித்திருக்கிறது. முற்போக்கு நடவடிக்கைகளோ ஜனநாயக நம்பிக்கையோ எள்ளவும் இல்லாத ஒரு மத அடிப்படைவாதிக்கு என்ன மரியாதையைத் தர முடியுமோ அதைக் கொடுத்தால் போதுமானது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!