ஈரானின் காந்தி மருத்துவமனை மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல்!

#Flight #Hospital #America #Attack #Israel #War #GunShoot #Iran #Iraq #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4 #IranVsIsrael
Lakhi
3 months ago
ஈரானின்  காந்தி  மருத்துவமனை மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல்!
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள புகழ்பெற்ற காந்தி மருத்துவமனை மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தெஹ்ரானின் வடபகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, "சியோனிச-அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள்" மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ISNA செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சம்பவம் தொடர்பான காணொளிகளில், மருத்துவமனையின் தரைப்பகுதியில் இடிபாடுகள் சிதறிக்கிடப்பதையும், நோயாளிகள் இன்றி வெறுமையாகக் கிடக்கும் சக்கர நாற்காலிகளுடன் கூடிய போர்க்காலக் காட்சிகளையும் காண முடிகிறது.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்களின் விபரங்கள் குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை. மகாத்மா காந்தியின் தார்மீக மற்றும் மனிதநேய விழுமியங்களை நினைவுகூரும் வகையில் "காந்தி மருத்துவமனை" எனப் பெயரிடப்பட்ட இந்த நிலையம், 2008 ஆம் ஆண்டு மருத்துவ நிபுணர்களால் தொடங்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாகச் செயற்பட்டு வந்தது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை மீதான தாக்குதல் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4