இன்றைய ராசிபலன் (02.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (02.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: உற்சாகமான நாள். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நடந்தேறும். பரணி: புத்தி சாதுரியத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை 1: சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். புதிய வேலைகளை சிலர் தொடங்குவீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எடுத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். ரோகிணி: வேலைப்பளு கூடும். இன்று தேவைக்கேற்ற பணம் வரும். மிருகசீரிடம் 1,2: நெருக்கடி நீங்கும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வரவில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். திருவாதிரை: பதட்டமின்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம்வரும். புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னை தீரும். உறவினர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தெளிவு பிறக்கும். பூசம்: வரவு அதிகரிக்கும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். ஆயில்யம்: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். சேமிப்பு உயரும்.

சிம்மம்

மகம்: காலையில் செலவு அதிகரித்தாலும் அதன்பின் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். பூரம்: வியாபாரத்தில் வருமானம் கூடும். உங்கள் விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். உத்திரம் 1: தெய்வ வழிபாட்டால் மனம் தெளிவடையும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.

கன்னி

உத்திரம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். அஸ்தம்: செயல்களில் லாபம் கூடும் என்றாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சித்திரை 1,2: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பார்த்த வருவாய் வரும். நேற்றைய நெருக்கடி நீங்கும். சுவாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் விருத்தியாகும். விசாகம் 1,2,3: சாதுரியமாக செயல்படுவீர். மற்றவரை அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவர். அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். கேட்டை: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த உதவியை பெறுவீர்.

தனுசு

மூலம்: நெருக்கடி நீங்கும் நாள். மனதில் இருந்த பயம் போகும். வருமானம் அதிகரிக்கும். பூராடம்: பணியாளர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உத்திராடம் 1: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். பெரிய மனிதர்களை சந்திப்பீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். திருவோணம்: குடும்பத்தில் பிரச்னைகள் தோன்றி விலகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சதயம்: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

மீனம்

பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: அலுவலக பிரச்னை தீரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ரேவதி: உறவினர் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!