இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு லாப ஸ்தான கிரகங்களின் ஆதிக்கத்தால், எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் தடையின்றி முடியும்.
விடாமுயற்சிக்கு உரிய கௌரவம் கிட்டும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக இனிப்பான செய்திகள் வந்து சேரும்.
அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தனி மரியாதை உண்டாகும். தொழில் மற்றும் நிதித்துறையில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு.
புதிய முதலீடு செய்ய இது பொற்காலம். வியாபாரிகளுக்கு வெற்றி, உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி மாற்றம் கிடைக்கும். உடல் சூடு மற்றும் கண் எரிச்சல் ஏற்படலாம்.
போதுமான நீர் அருந்துவதும், முருகப்பெருமானுக்குச் செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவதும், உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் நலனை மேம்படுத்தும்.
ரிஷபம்
ரிஷப ராசியினரின் கடின உழைப்பிற்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உங்களின் நீண்ட காலக் கனவு நனவாகும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுகள் முன்னேற்றம் காணும். உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குத் தொண்டர்களின் ஆதரவு பெருகும்.
அரசியல் சந்திப்புகள் எதிர்காலப் பதவிக்கு அஸ்திவாரம் அமைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உங்கள் வர்த்தகம் அடுத்த நிலைக்கு செல்லும்.
பழைய பாக்கிகள் வசூலாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். சிறுநீரகம், அடிவயிறு சார்ந்த உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது, பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்களை வழங்குவது தொழில் தடைகளை நீக்கி சுபிட்சத்தை அளிக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும் வாரமிது. குரு பகவான் பார்வையால் உங்களின் அறிவுத்திறன் மிளிரும்.
ஆன்மிகப் பயணங்கள் மூலம் மன அமைதி பெறுவீர்கள். தந்தை, பெரியோர் ஆசியால் பெரிய சொத்துச் சிக்கல் சுமுகமாக முடியும். குடும்பத்தில் கொண்டாட்டங்கள் நிகழும். நண்பர்களுடனான உறவு பலப்படும்.
தொழில் மற்றும் வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்குப் புகழும் பணமும் சேரும்.
வங்கி இருப்பு உயரும். தேவையற்ற செலவுகள் குறையும். நரம்புத் தளர்ச்சி, ஒவ்வாமை ஏற்பட்டு விலகும். மகாவிஷ்ணுவிற்குத் துளசி மாலை அணிவித்து வழிபடுவது, ஏழை மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களைத் தானமாக வழங்குவது இறை அருளைப் பெற்றுத்தரும்.
கடகம்
கடக ராசி நேயர்கள் எதிலும் நிதானத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். எதிர்பாராத பணவரவும், அலைச்சல்களும் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடித்தால் பெரிய வெற்றியை எட்டலாம்.
குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் பேசும்போது கவனம் தேவை.
இல்லாவிட்டால் வீண் வதந்திகள் ஏற்படும். தொழில் - வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். இருப்பதை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஜீரண மண்டலம் சார்ந்த பிரச்சினைகள் வரலாம்.
சிவபெருமானுக்குப் பால் அபிஷேகம், கோவில் குளங்கள், நீர்நிலைகளுக்கருகில் விளக்கேற்றி வழிபடுவது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது நலம் தரும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு கூட்டுத் தொழில், மணவாழ்க்கையில் புதிய பொலிவு உண்டாகும். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். உங்கள் ஆளுமைத் திறன் கண்டு எதிரிகள் பின் வாங்குவார்கள்.
தைரியம் கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு. பிள்ளைகள் வெற்றிகளால் பெருமை அடைவீர்கள். அரசியல்-பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு உயரும்.
புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். நீண்ட கால முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். சொத்துச் சேர்க்கை உண்டாகும். வியாபாரிகள் புதிய கிளைகளைத் தொடங்கும் முயற்சியில் வெற்றி காண்பர்.
ஏற்றுமதி-இறக்குமதித் தொழில் சிறக்கும். இதயம், ரத்த அழுத்தம் ஆகியவற்றில் கவனம் தேவை. கோதுமை தானம் செய்வது, காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களிடம் ஆசி பெறுவது நன்மைகளை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்கள் எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி வாகை சூடும் வாரமிது. நிலுவையில் இருந்த சட்டப் போராட்டங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். மூத்தவர் ஆலோசனைகள் நல்வழி காட்டும். உறவினர்களிடையே உங்கள் மதிப்பு உயரும். அரசியலில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சால் வெல்வீர்கள்.
சமூகப் பணிகளில் உங்கள் பங்களிப்பு பாராட்டப்படும். தொழில்-உத்தியோகத்தில் மேன்மை உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள்.
பழைய கடன்கள் வசூலாகும். நிதிநிலை மேம்படும். தோல் சார்ந்த பாதிப்புகள் அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபடவும். ஏழை எளியவர்களுக்குப் பச்சைப்பயறு தானம் செய்வது, பசுவுக்கு அருகம்புல் கொடுப்பது ஆகியவை நலம் பல தரும்.
துலாம்
துலாம் ராசி நேயர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் வாரம். உங்களின் படைப்பாற்றல், தனித்திறமை உலகிற்குத் தெரியவரும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்து உயர்வர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள், சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல் களத்தில் புதிய கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.
நிதி நிலையில் முன்னேற்றம் உண்டு. பங்குச்சந்தை, ஊக வணிகம் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள்.
வர்த்தகம் சிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பப்படி நல்ல இடமாற்றம் கிடைக்கும். அடிவயிறு, முதுகு வலி வரக்கூடும். நீண்ட நேர அமர்வுப் பணிகளைத் தவிர்க்கவும்.
மல்லிகை மலர்களால் அம்பாளை அர்ச்சிப்பதும், பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தானம் செய்வதும் மனமகிழ்ச்சியைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு சுக ஸ்தானத்தில் கிரகங்கள் சங்கமிப்பதால், வீடு, வாகனம், சொத்துச் சேர்க்கை உண்டு. மகிழ்ச்சியான வாரம். தாயார் வழி உறவுகளால் அனுகூலம் உண்டு. நண்பர்களுடன் அலவளாவி மகிழலாம். வீட்டில் குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். விடாமுயற்சியால் பெரும் காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சமூகத் தொடர்புகள் விரிவடையும். அரசியல்வாதிகள் மக்கள் மதிப்பைப் பெறுவார்கள். ஆதரவு பெருகும். தொழில்-உத்தியோகத்தில் உங்கள் அர்ப்பணிப்பு உணர்விற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறைக்கு இது பொற்காலம். பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை உண்டாகும். மார்புச் சளி, சுவாசக் கோளாறு ஏற்படலாம். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவதாலும், பறவைகளுக்குத் தானியங்கள் மற்றும் தண்ணீர் வைப்பதும், சிக்கல்களை அகற்றி நற்பலன்களைத் தரும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு வெற்றி ஸ்தான வலுவால் தன்னம்பிக்கையும், துணிச்சலும் பலமடங்கு உயரும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிட்டும்.
பயணங்களால் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்கள் உங்கள் ஆலோசனைகளை நாடுவார்கள்.
அரசியல், சமூக அளவில் இருப்பவர்கள் பேச்சாற்றலால் பலரைக் கவர்வர். மேலிடத்திலிருந்து சுபச் செய்திகள் வரும். தொழில் ரீதியாகப் புதிய கிளைகளைத் தொடங்க உகந்த காலம்.
விற்பனை பிரதிநிதிகள் மற்றும் எழுத்தாளர்களுக்குப் பொற்காலம். வருமானம் நல்லபடி உயரும். தேவையற்ற செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
காது, தொண்டை சார்ந்த உபாதைகள் வரலாம். நந்திக்கு மாலை நேரங்களில் முல்லை மலர் சாற்றி வழிபடவும். சித்தர் ஜீவ சமாதி தரிசனம் மனத் தெளிவை தரும். வயதானவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது நலம் பல தரும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு தன ஸ்தான கிரகங்களின் சேர்க்கை ஏற்படுவதால், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு உயரும்.
பழைய சொந்தம் வந்து சேரும். உங்களின் பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்ப பொருளாதார நெருக்கடி நீங்கிச் சேமிப்பு உயரும்.
குடும்ப உறுப்பினர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புகழ் கூடும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான ஆணைகள் கைவந்து சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய வர்த்தக தொடர்புகள் லாபம் தரும்.
வெளிவட்டார தொடர்பு அதிகமாகும் பல்வலி, கண் சார்ந்த பிரச்சினைகள் வரலாம். சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யவும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களுக்கு வாழ்வில் முக்கிய திருப்புமுனை ஏற்படும் வாரமிது. உங்கள் அறிவுத்திறன் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல் கூடும்.
தனிப்பட்ட முறையில் ஒரு சாதனை நிகழ்த்தி பலரையும் அசத்துவீர்கள். குடும்பத்தில் சுப காரிய பேச்சு தொடங்கும். வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும்.
அரசியலில் இருப்பவர்கள் பெரும் மாற்றங்களைச் சந்திப்பீர்கள். பொதுவாழ்வில் உங்கள் புகழ் ஓங்கும். பொருளாதார ரீதியாகப் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
தொழிலில் அதிரடி மாற்றங்களைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கும்.
அதிக உஷ்ணம், மன அழுத்தம் ஏற்படும். நீல நிற மலர்களால் ராகு கால துர்க்கை பூஜை செய்வது, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது ஆகியவை கிரக தோஷங்களைக் குறைக்கும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு சுப விரயங்கள், ஆன்மிகத் தேடல்கள் நிறைந்த வாரம். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிலும் நிதானம் காப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
முயற்சிகள் பலிதமாகும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் கைகூடும். குடும்ப பெரியவர்களின் உடல்நலனில் கவனம் தேவை. எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் மிதமான லாபம் கிட்டும்.
முதலீடுகளைச் செய்யும்போது ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம். ஆன்மிகப் பணி மனநிறைவு தரும். தூக்கமின்மை, கால் வலி ஏற்படலாம்.
சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடவும். பெண்கள், ஏழைக் குழந்தைகளுக்குப் பால் அல்லது இனிப்புகள் பிரசாதமாக வழங்குவது நலன்கள் பல தரும்.
(வீடியோ இங்கே )