மார்ச் மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
சந்தர்ப்பம் எப்படி உள்ளதோ அதன் படி கொண்டவர் விரைவான முடிவெடுக்கும் திறன் கொண்டவர் நீங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு:மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
பதவி உயர்வு குறித்த சுட்டுமொழி கிடைக்கலாம். புதிய பொறுப்புகள் நம்பிக்கையை உயர்த்தும். வியாபாரிகளுக்கு லாபம் மிதமான உயர்வு உண்டாகும்.
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. பணவரவுக்கு பங்கமில்லை. குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் நீண்டநாள் நிலுவையில் இருந்த விஷயங்கள் இம்மாதம் முடிவுக்கு வரும்.
கணவர்–பிள்ளைகள் உறவில் புரிதல் அதிகரிக்கும். சொத்து/வீட்டு அலங்காரத்தில் சிறிய முன்னேற்றம் காணலாம். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கும் காலம்.
படைப்புகளில் புதுமை பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்கு திருப்பம் கொண்ட மாதமாக அமைகிறது. வெளிநாட்டு தொடர்புகள் அமையும்.
பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கவனம் சிதறாமல் படித்தால் உயர்ந்த மதிப்பெண் பெறுவீர்கள். போட்டித் தேர்வில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆசிரியர் ஆதரவு உறுதி.
பரிகாரம்:
திங்கள் கிழமை அன்று அங்காள பரமேஸ்வரிக்கு பொங்கல் வைத்து படைப்பது நல்லது.
ரிஷபம்
சட்டென்று சீக்கிரம் கோபம் வந்துவிடும் குணமுள்ளவர் நீங்கள் பொறுமையுடன் இருந்தால் வெற்றி உங்களுக்குத்தான்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை கூடும் ஆனால் அதற்கேற்ப பலன் உறுதியாக கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
இன்னும் சிலருக்கு இடமாற்றம் குறித்து யோசனை உண்டாகும். வியாபாரிகளுக்கு அதிக முதலீட்டினால் தங்கள் லாபம் கூடும்.
குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு கூடிவரும். ஒரு சிலர் ஆடை ஆபரணச் சேர்க்கை நிகழும்.
கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். உங்கள் பெயர் பட்டி தொட்டியெல்லாம்–புகழ் உயரும். ஒரு சிலருக்கு பெரிய கதாபாத்திரம் கிடைக்கும். மாணவர்களுக்கு மன அமைதியை வரவழைக்க தியானத்தை மேற்கொள்ளவும்.
இது தங்களின் நினைவாற்றல் மேம்படவும் படிப்பில் கவனம் செலுத்த உதவும். வெளிநாட்டு கல்வி வாய்ப்பு உண்டாகும். பெற்றோரின் ஆதரவு உண்டு.
பரிகாரம்:
பெண்கள் வெள்ளிக் கிழமை அன்று அம்மனுக்கு விரதம் மேற்கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்லி வழிபடுவது மிகவும் நல்லது.
மிதுனம்
யோசிக்காமல் செயல்படும் பழக்கம் கொண்டவர் நீங்கள். சிந்தித்து செயல்பட்டால் தங்களுக்கு தோல்வி பயம் இல்லாமல் போகும். வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் உயர்வு உண்டு.
நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வேலைச்சுமை அதிகரிக்கும். உடல் நிலையில் கவனம் தேவை.
வியாபாரிகளுக்கு உங்களுக்கு போட்டியாக இருந்து கொண்டு தொல்லை கொடுத்து வந்தவர்கள், இனி நம்மால் வீம்புக்கு இரையாக முடியாது என அவர்களாகவே முடிவெடுத்து, தங்கள் வியாபார நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வார்கள்.
அடகு வைத்திருந்த நகைகளை மீட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே சுமூகமான மனநிலை நிலவி குடும்ப முன்னேற்றத்திற்குப் பல திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள்.
கை, கால்களில் வலி வந்து போகும். உங்களுக்கென்று திரைப்படத் துறையில் தனி இடம் இருக்கும் என்பதை இந்த மாதம் உணருவீர்கள். சின்னத்திரை மற்றும் சினிமாக்களில் நல்ல முன்னேற்றம் உண்டு.
பரிகாரம்:
செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை அன்று அம்மன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
கடகம்
ஒரே விஷயத்தில் நிலைத்திருக்க முடியாமை இதுதான் தங்கள் பலவீனம். ஆதலால், தியானம் மேற்கொண்டால் தங்களின் மனம் ஒருநிலைபடும்.
அலுவலகத்தில் தங்களுக்கு தரவேண்டிய பாக்கித் தொகைகள் இந்த மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும்.
வியாபாரம் செய்யும் பெண்கள் தங்களுக்கு அலைச்சல்கள் கூடி உடல் ஆரோக்கியம் குறைவு ஏற்படலாம். ஆதலால், உடல் நலத்தில் அக்கறைக் கொள்வது நல்லது.
குடும்பத்துடன் சிறுபயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். விருந்து, விழா என கலந்து கொள்வீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் அதிகமான இனிப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கலைஞர்கள் தங்கள் சக கலைஞர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவது, உங்கள் வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்கப் பெரிதும் உதவும்.
மாணவர்கள் தாங்கள் மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. அப்பொழுதுதான் தேர்வின் போது தங்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற உதவியாக இருக்கும்.
பரிகாரம்:
வயது முதிர்ந்தவருக்குச் இயன்ற உதவிச் செய்யுங்கள். காகத்திற்கு உணவு வைத்து விட்டு சாப்பிடுவது மிக்க நன்று.
சிம்மம்
வேலைக்குச் செல்லும் உயர் அதிகாரிகள் மற்றும் உங்கள் சக பணியாளர்கள் உங்களுடன் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் உங்கள் பணிகளில் எவ்வித குறைபாடும் ஏற்பட வாய்ப்பில்லை.
பணவரவு திருப்தி கொடுக்கும். வியாபாரிகளுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். துணி வியாபாரம் மற்றும் பருத்தித் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உயரும்.
முதலீடுகளை அதிகம் போடுவர். சிறிது அலைச்சல்கள் உண்டு. குடும்ப நிர்வாகத்தில் உங்கள் பொறுப்புகளைச் மிகச் சிறப்பாக நிறைவேற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி வீட்டினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். கலைஞர்களுக்கு பொற்காலமாக அமையும்.
அனைத்து கிரகங்களும் தங்களுக்குச் சாதகமாக உள்ளதால் குறிப்பாக கலைக்குரிய சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள்.
வகுப்பறையில் அநாவசியப் பேச்சை நிறுத்தி விடுவது தங்கள் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்க உதவும். அதனால், நல்ல உள்வாங்கும் திறன் கூடி மனதில் பதியும். மதிப்பெண்கள் அதிகம் பெற இந்நடவடிக்கை உதவும்.
பரிகாரம்:
சனி காயத்ரி மந்திரம் காகத் வஜாய வித்மஹே! கட்க ஹஸ்தாய தீமஹி!! தந்நோ மந்த ப்ரசோதயாத்!! என்ற மந்திரத்தை சனி கிழமை காலை 6 மணி முதல் 7 மணிவரைக்குள் ஒன்பது முறை சொல்வதால் நன்மைகள் விளையும்.
கன்னி
சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் உங்கள் உயர் அதிகாரிகளின் பேரன்பையும் மதிப்பையும் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றைப் பெற்று இன்புறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு தாங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திந்துத் துயரில் ஆழ்ந்திருந்த நீங்கள். தங்களுக்கு இப்போது இழந்த தொகை எல்லாம் திரும்பப் பெறுவதால் மனமகிழ்வீர்கள்.
திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறின்றி கவலைப்பட்டு வந்த தம்பதியருக்கு கருத்தரிக்க அதிக வாய்ப்புண்டு. இக்காலக் கட்டத்தில் நல்ல மருத்துவரிடம் சிகிட்சை மேற்கொள்ளலாம்.
நிச்சயம் பலனுண்டு. கலைஞர்களுக்கு திரைப்பட தொடர்பில் இருக்கும் வழக்கமாக உள்ள தொடர்புகள் தொடர்ந்து வரும் என்பதிலும் சந்தேகமில்லை.
படத்திற்காக முன் பணம் கிடைக்கப் பெறும். படிப்புக்காக வெளிநாடு சென்று படிக்க ஆர்வமிக்க மாணவர்களுக்கு அதற்குண்டான பரிட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே ஸ்காலர்ஷிப்பை பெற இயலும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு விரதம் மேற்கொண்டு ராகு கால நேரத்தில் துர்கா அஷ்டகம் படித்து எலுமிச்சம் பழ த்தில் விளக்கேற்றி வருவது தங்கள் வாழ்வின் உயர் நிலைக்கு வர வழிவகுக்கும்.
துலாம்
பொதுவாக உங்கள் அழகுணர்வு மற்றும் கவர்ச்சியான பேச்சுத்திறன் தங்களை மற்றவர்களிடமிருந்து ஈர்க்கச் செய்கிறது. உத்யோகத்தில் அமைதி நிலவும்.
நேரடி அதிகாரி உங்களுக்கு உதவாவிட்டாலும் அதற்கு மேலுள்ள அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும்.
வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். கோபப்பட்டால் தங்களுக்குத்தான் நஷ்டம். குடும்ப நிர்வாகத்தை பொறுத்தவரை உங்கள் சிறப்பான நடவடிக்கைகள் நற்பெயரைப் பெற்றுத் தரும்.
தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்வீர்கள். தாங்கள் நினைத்தப்படியே பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும்.
பலப் பல படங்கள் ஒப்பந்தம் ஆகும். ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து முடித்து விடுவீர்கள்.
மாணவர்கள் நன்கு படிப்பர். கல்வி நிறுவனங்கள் மூலமாக சுற்றுலா சென்று வரும் வாய்ப்பும் கிட்டும்.சுற்றுலா செல்லும் போது தங்கள் உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது.
பரிகாரம்:
குரு பகவானுக்கு வியாழன் தோறும் சென்று அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.
விருச்சிகம்
தங்கள் மனம் அடிக்கடி அலைபாயும். ஆதலால், நவீன மாறுதல்களை ஏற்று நடப்பவர் நீங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
உத்யோகத்தில் பெரும் பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் கடின உழைப்புத் தேவைப்டும். இரும்பு வியாபாரிகள் தாங்கள் அதிக முதல் போடுவதை தவிர்ப்பது நல்லது.
பொருட்கள் விற்ற பின் தொழிலில் முதல் போடுவது நஷ்டத்தை தவிர்க்க இயலும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும்.
இருப்பினும் தங்கள் சிக்கன நடவடிக்கைகளால் தங்கள் கணவனின் மனதில் நீங்கா இடம் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.
சக மாணவர்களுடன் வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.
பரிகாரம்:
சனி பகவானுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது எள் சாதம் செய்து சாமிக்கு படைத்து கோவிலில் உள்ள வயதானவர்களுக்கு கொடுத்து வருவதால் உங்கள் குடும்பத்தில் தடைப்பட்டிருந்த காரியங்கள் யாவும் நிச்சயம் நடைபெற வாய்ப்புண்டு.
தனுசு
ரகசியம் காக்கும் திறன் கொண்டவர் நீங்கள். மற்றவர்களுக்கு வாக்கு கொடுத்தால் மீறாதவர் நீங்கள். உத்யோகஸ்தர்கள் தங்கள் சக ஊழியர்களிடம் தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்ல வேண்டாம், அவர்களுடன் அளவோடு பழகுவது நல்லது.
மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அவர்கள் தங்களுக்கு நற்பொறுப்பினை தருவர். உங்கள் முதலீட்டுக்குத் தேவையான தொகையைப் பெற முயற்சி செய்தால் வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.
அந்த முதலீட்டால் லாபம் இரட்டிப்பாகும். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான நவ நாகரிகப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்.
இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும். கலைஞர்கள் தங்கள் சக நடிகர்களுடன் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பழகுவது நல்லது. எதிர்பாலினரிடத்தில் அதிக நெருக்கம் வேண்டாம்.
கல்லூரி மற்றும் பள்ளிச் சுற்றுலா செல்லும் போது நீர் நிலைகளின் அருகில் செல்லாமல் இருப்பது அவசியம். கொஞ்சம் பயம் எப்பொழுதும் இருப்பது நல்லது. அஜாக்கிரதையுடன் பயணம் செய்ய வேண்டாம்.
பரிகாரம்:
கை, கால் முடமானவர்களுக்கு உதவுதல் மற்றும் அவ்வப்போது வயது முதிர்ந்த பெரியவர்களை வணங்கி அவர்களின் நல்ஆசிகளைப் பெறுவதும் நல்லது.
மகரம்
எள் என்றால் எண்ணெயாய் நிற்பவர் நீங்கள். சுறுசுறுப்புடன் செயல்படுபவர் நீங்கள். மேலதிகாரிகளிடம் அமைதியாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது.
தேவையற்ற விசயங்களில் அனாவசியமாக தலையிடும் உங்கள் போக்கை தவிர்ப்பது அவசியம். வெளியூர் வியாபாரத்திற்காக அடிக்கடி செல்பவர்கள் பயணத்தின்போது தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது நல்லது.
தங்கள் குடும்பத்தை பராமரிப்பதில் உங்கள் நிர்வாகத்திறமைப் பளிச்சிடும். மாமியார் மருமகள் உறவு சமாதானமாக செல்லும். மற்றபடி வீடு கட்டும் திட்டம் நிறைவேறும்.
வெளியூர் பயணங்கள் அடிக்கடி ஏற்பட இடமுண்டு. அங்கு தங்கள் உடைமைகளான செல்போன் போன்ற பொருட்களில் கவனம் தேவை.
உங்கள் திறமையை முழுமையாக வெளிபடுத்தக்கூடிய வாய்ப்பு தேடி வரும். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றிறாமல் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி வாகையை சூடலாம்.
பரிகாரம்
குல தெய்வ வழிபாட்டில் அக்கறை செலுத்துங்கள். அனாதை இல்லங்கள் முதியோர் காப்பகங்களுக்கு முடிந்த அளவிற்கு உதவுங்கள். முடிந்தால் அனுதினமும் சண்முக கவசம் படித்து வருவதும் பல நன்மைகளைப் பெற உதவும்.
கும்பம்
இன, மத பாகுபாடின்றி பழகும் குணமுள்ளவர் நீங்கள். அன்பே குலம் என்று போற்றுபவர் நீங்கள். உத்யோகதர்களுக்கு இதுவரை மறுத்து வந்த மேலிடத்திலிருந்து பதவி உயர்வுக்கான உத்தரவு இப்போது உங்களை தேடி வரும்.
இனி கவலை வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவும் கிட்டும். தங்களுக்கு சோதனைகள் மறைந்து அவையாவும் சாதனையாக மாறக்கூடியகாலமாதலால் வியாபாரத்தில் மற்ற போட்டியாளர்கள் பலரும் மூக்கில் விரல் வைத்து வேர்க்கும் வகையில் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பீர்கள்.
கைத்தொழில் உங்கள் குடும்பத் தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கும். ஆதலால், நீங்கள் தங்களுடைய தனித்திறமையை பயன்படுத்தி அதாவது, டைலரிங், அழகு நிலையங்கள் மற்ற மற்ற சுயதொழிலை ஆரம்பித்து லாபத்தை ஈட்டுவீர்கள்.
உங்கள் பெருமைகளையும் திறமைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வகையில் பல்வேறு சிறப்பான வாய்ப்புகள் இந்த மாத காலகட்டத்தில் மிக அதிகமாக இருக்கும்.
மாணவர்கள் படிப்பில் அதிகமான அக்கறையுடன் திரும்பத் திரும்ப எழுதி பார்த்தால்தான் தாங்கள் தங்கள் இலக்கினை எட்ட இயலும். இவ்வாறு செய்தால் அதிக மதிப்பெண்களுடன் தங்களுக்குப் பிடித்த துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
பரிகாரம்:
"காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்" என்ற மந்திரத்தை சனி பகவான் காயத்ரி மந்திரத்தை மனதிலேயே பாராயணம் செய்வது நல்லது. வீட்டிலேயே சனி கிழமை தோறும் ஒன்பது முறையாவது சொல்லி வழிபடுவது நலம்.
மீனம்
தங்களை நம்பியவரை கைவிடாதவர் நீங்கள். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் கொண்டவர் நீங்கள். உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் நினைத்த அலுவலகத்திற்கு இடமாற்றம் ஏற்படும். இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு ஊருகளில் பணிபுரிய நேரலாம்.
வீட்டை விட்டு பிரிகிறோமே என்ற வருத்தத்தை தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு: சுய தொழிலாக இருந்தாலும், கூட்டுத் தொழிலாக இருந்தாலும் சற்று கவனம் தேவை.
வியாபாரம் நிமித்தமாக வெளிநாடு அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தைத் திறம்பட நடத்தி நற்பெயர் பெறுவீர்கள்.
கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.
குறிப்பாக கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான காலம் இது. இதனை நன்கு பயன்படுத்தி பணமும் புகழும் பெற முற்படுங்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரக் கூடிய காலமிது.
மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். சுற்றுலாக்களுக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது நீர் நிலைகளில் குளிக்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்:
"ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா"
என்ற மந்திரத்தை சனி பகவான் காயத்ரி மந்திரத்தை மனதிலேயே பாராயணம் செய்வது நல்லது.
(வீடியோ இங்கே )