ஈரானின் புதிய இடைக்கால தலைவராக அலிரேசா அராஃபி நியமனம்

#Death #Attack #Israel #Iran #leader
Prasu
3 months ago
ஈரானின் புதிய இடைக்கால தலைவராக அலிரேசா அராஃபி நியமனம்

ஈரானின் ஆன்மிக மற்றும் அரசியல் ரீதியான உயர் தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உயர் தலைவராக 67 வயதுடைய அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷியா கொள்கைவாதியான அலிரேசா அராபி, ஈரானின் மத மற்றும் அரசியல் விவகாரங்களில் நீண்ட அனுபவம் கொண்டவர்.

கமேனியின் மறைவுக்குப் பின்னர் நாட்டின் அதிகாரக் கட்டமைப்பை வழிநடத்தும் உயரிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைவரைத் தீர்மானிக்கும் மற்றும் வழிகாட்டும் இந்தக் கவுன்சிலில் ஈரானின் தற்போதைய ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் மற்றும் ஈரானின் உள்நாட்டு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இடைக்கால உயர் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அலி கமேனியின் நீண்டகால தலைமைத்துவத்திற்குப் பிறகு ஈரான் எந்த திசையை நோக்கிப் பயணிக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் புதிய தலைவர் அராபியின் பங்கு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4