மத்திய கிழக்கு நோக்கிய விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!

#Flight #America #world_news #Country #Iran #Iraq #suspend #East #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #IranVsIsrael
Lakhi
6 hours ago
மத்திய கிழக்கு நோக்கிய விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அனைத்து நாடுகளினதும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இன்று (01) மாலை 5 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

இன்று(01) காலை 06.15 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவிருந்த 18 விமானங்களும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 25 விமானங்களும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.

www.airport.lk என்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் இணையத்தளத்திற்குச் சென்று விமானப் பயண விபரங்கள் தொடர்பில் புதுப்பித்துக்கொள்ளுமாறு விமான நிலைய கடமை நேர அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!