எரிபொருள் விலை 4 ரூபாவால் அதிகரிப்பு - மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

#SriLanka #prices #government #Fuel #Lanka4 #L4
Prasu
5 hours ago
எரிபொருள் விலை 4 ரூபாவால் அதிகரிப்பு - மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, லங்கா டீசல் நான்கு ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 281 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 6 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

எனினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 340 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் 182 ரூபாய்க்கும் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!