கம்பஹாவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!

#SriLanka #liquor #Raid #Gampaha #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
கம்பஹாவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!

மாவட்டம் பமுனுகம, முத்துராஜவெல பகுதிகளில், சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் கோடா வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (27) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில், சந்தேகநபரிடமிருந்து 168 லீற்றர் 750 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 2,835 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டது. 

இதன்போது சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் உஸ்வெட்டகெய்யாவ் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபராக அடையாளம் காணப்பட்டார். 

பமுனுகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4