வெல்லம்பிட்டியில் வீடு புகுந்து ஒருவர் வெட்டிப் படுகொலை!

#SriLanka #Death #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
வெல்லம்பிட்டியில் வீடு புகுந்து ஒருவர் வெட்டிப் படுகொலை!

கொழும்பு, வெல்லம்பிட்டி - சாதம்வத்தை பகுதியில் நேற்று வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், சாதம்வத்தை - ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்த வீட்டின் உரிமையாளருடன் தற்காலிகமாகத் தங்கியிருந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்கான பின்னணியில் போதைப்பொருள் விவகாரம் இருக்கலாம் எனப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் தற்போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக, போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கிடையே நிலவும் நீண்டகாலப் பகை அல்லது பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

நேற்று வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்த நபரை வாளால் வெட்டித் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4