இன்றைய ராசிபலன் (28.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: வேலைபளு அதிகரிக்கும் நாள். நீங்கள் நினைப்பது நடக்கும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். பரணி: திட்டமிட்டு செயல்படுவீர். குடும்பத்தினர் விருப்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர். கார்த்திகை 1: உழைப்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உற்சாகமாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும் நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரிகளுக்கு விற்பனைக்கூடும் ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வருமானம் வரும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உங்கள் வேலைகள் இன்று எளிதாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருவாதிரை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம்வரும். புனர்பூசம் 1,2,3: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.
கடகம்
புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். பூசம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆயில்யம்: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உதவி கேட்போருக்கு உதவி செய்வீர்.
சிம்மம்
மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். பூரம்: நீங்கள் நினைப்பது நடக்கும். எதிர்பார்த்தது கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். உத்திரம் 1: நேற்றுவரை தடைபட்ட வேலை இன்று நடக்கும். வராமல் இருந்த பணம் வரும். விருப்பம் பூர்த்தியாகும்.
கன்னி
உத்திரம் 2,3,4: லாபமான நாள். வியாபாரத்தில் உங்கள் அணுகு முறை லாபம் தரும். வருமானம் அதிகரிக்கும். அஸ்தம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். கேட்ட இடத்தில் பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
துலாம்
சித்திரை 3,4: வியபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் அணுகுமுறையால் நேற்றைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர். சுவாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். மேலோரின் சந்திப்பு நிகழும். விசாகம் 1,2,3: எதிலும் உங்களின் நேரடிப் பார்வை தேவை. பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும்.
விருச்சிகம்
விசாகம் 4: நன்மையான நாள். நெருக்கடி விலகும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் முயற்சி பலிக்கும். அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளால் உங்கள் வேலை நடக்கும். கேட்டை: பிறரை அனுசரித்துச் சென்று வேலைகளை முடித்துக்கொள்வீர். தேவைக்கேற்ற வருமானம் வரும்.
தனுசு
மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் வேலைகளில் எச்சரிக்கை அவசியம். பூராடம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். ஒரு சிலருக்கு பிரச்னை தேடிவரும். உத்திராடம் 1: வியாபாரத்தில் நீங்கள் வைத்த நம்பிக்கை எதிர்மறையாகும். மனம் குழப்பமடையும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். மறைமுகத் தொல்லை நீங்கும். திருவோணம்: விட்டுக் கொடுத்து செல்வதால் தம்பதிக்குள் ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்கலாம். விருப்பம் நிறைவேறும். அவிட்டம் 1,2: வரவால் வளம் காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
கும்பம்
அவிட்டம் 3,4: யோகமான நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். சதயம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். வரவேண்டிய பணம் வரும். நினைத்ததை சாதிப்பீர். பூரட்டாதி 1,2,3: தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மீனம்
பூரட்டாதி 4: கனவு நனவாகும் நாள். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்திரட்டாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பீர்.
(வீடியோ இங்கே )