தாக்குதலுக்கு தயாராகும் ஈரான் - இஸ்ரேலை விட்டு வெளியேறும் அமெரிக்கர்கள்

#America #people #Attack #Embassy #Iran
Prasu
4 hours ago
தாக்குதலுக்கு தயாராகும் ஈரான் - இஸ்ரேலை விட்டு வெளியேறும் அமெரிக்கர்கள்

உலகமே அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை எந்த நேரமும் அடிச்சு நொறுக்கும் எண்டு திக் திக் எண்டு பாத்துக்கொண்டிருக்க, இப்ப ஆட்டம் அப்படியே தலைகீழா மாறிட்டுது.

இஸ்ரேல்ல இருக்கிற அமெரிக்கர்களை "இண்டைக்குள்ள எந்த பிளைட் கிடைச்சாலும் பிடிச்சு நாட்டை விட்டுத் தப்பிச்சு ஓடிடுங்கோ" எண்டு அமெரிக்கா அவசர அவசரமாக வெளியேற்றி கொண்டிருக்கிறது, உலக அரங்கில ஒரு மாபெரும் புயலைக் கிளப்பியிருக்கு.

இந்தத் திடீர் திருப்பத்துக்குப் பின்னால் இருக்கிற மாபெரும் அதிர்ச்சித் தகவல்களை இஸ்ரேலின் பிரபல பத்திரிகையான 'தி ஜெருசலேம் போஸ்ட்' (The Jerusalem Post) இப்ப அம்பலப்படுத்தியிருக்கு.

இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்கபீ (Mike Huckabee), இஸ்ரேல்ல இருக்கிற அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நள்ளிரவு 12:04 மணிக்கு ஒரு பகீர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

அந்த மின்னஞ்சலில் அவர் மிகத் தெளிவாக, "உடனடியா இன்று எல்லாரும் இஸ்ரேலை விட்டு வெளியேறுங்கோ. எந்த நாட்டுக்குப் பிளைட் கிடைக்குதோ, முதல்ல அந்த பிளைட்டைப் பிடிச்சு இந்த நாட்டை விட்டு வெளியே போறது மட்டும்தான் இப்ப உங்கட முதல் முன்னுரிமையா இருக்கோணும்" எண்டு செம பதற்றமாக் குறிப்பிட்டிருக்கிறார். 

இது மட்டுமில்லாம, அமெரிக்க அரசாங்கமும் தன்னோட குடிமக்களை இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் எண்டு உத்தியோகபூர்வமா எச்சரிச்சிருக்கு.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!