ஈஸ்டர் தாக்குதல் மௌலவியின் மூளையா? கோடிக்கணக்கில் லெபனானிலிருந்து கைமாறியதா?

#SriLanka #government #Easter Sunday Attack #President #AnuraKumaraDissanayake
Prasu
4 hours ago
ஈஸ்டர் தாக்குதல் மௌலவியின் மூளையா? கோடிக்கணக்கில் லெபனானிலிருந்து கைமாறியதா?

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே தவிர, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே அல்ல என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது நடவடிக்கையானது கத்தோலிக்க திருச்சபையையும் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காக அரசு ஆடிய ஒரு நாடகம் என்று சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் நிலக்கரி மோசடிப் புகார்களில் சிக்கியுள்ள அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 

சனல் 4 ஊடகம் வெளியிட்ட தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவை என்பதை ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான சுரேஷ் சலேவைச் சிறையில் அடைத்துவிட்டு, தாக்குதலுக்கு நிதியுதவி செய்தார் என்று கருதப்படும் இப்ராஹிம் போன்றவர்களைச் சுதந்திரமாக நடமாடவிடுவது எந்த வகையில் நியாயமானது என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!