வீட்டிலிருந்த மூதாட்டியை தூக்கியடித்த யானை!

#SriLanka #Attack #Elephant #Home #Old #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
வீட்டிலிருந்த மூதாட்டியை தூக்கியடித்த யானை!

மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை புகுந்து தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் காணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று,மக்கள் குடியுருப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்து திடீரென மக்களைத் தாக்கியுள்ளது.

இதன்போது அதிகாலை வேளையில் வீட்டில் தனது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த 75 வயதுடைய மூதாட்டி உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பின் நகரம் கிராமம் என அனைத்து பகுதிகளிலும் யானைகளின் அட்டகாசம் முடிவின்றி தொடர்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4