பொடி லெசி காலி குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
பொடி லெசி காலி குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு!

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து விசேட பொலிஸ் குழுவினரால் இன்று வெள்ளிக்கிழமை (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார்.

இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் தலையீட்டின் மூலம் இந்திய பாதுகாப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார். 

 2024ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி பிணையில் விடுதலையானதன் பின்னர், கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற பொடி லெசி, 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து, பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, இன்றையதினம் அதிகாலை 05.55 மணியளவில் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-142 விமானம் மூலம் அவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 

மேலதிக விசாரணைகளுக்காக அவர் பலத்த பாதுகாப்புடன் காலி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!