இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட“பொடி லெசி” இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
#India
#SriLanka
#Arrest
Soruban
1 hour ago
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி எனப்படும் , ஜனித் மதுசங்க 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
அதற்கமைய, அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் இன்று நாட்டுக்குக் அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.