கிளிநொச்சியில் சமுர்த்தி வங்கியின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

#SriLanka #Jaffna #Bank #Minister #Building
Prasu
3 months ago
கிளிநொச்சியில் சமுர்த்தி வங்கியின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிக்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இலங்கையின் மீன்பிடி, நீர்வாழ் உயிரின மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மலையாளபுரம் மக்களின் பொருளாதார முன்னேற்றப் பயணத்தில் இந்த புதிய கட்டிடம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமுர்த்தி பயனாளிகள் மேலும் வசதியான சூழலில், விரைவான மற்றும் திறமையான சேவைகளைப் பெறும் வகையில் இந்த கட்டிடம் வடிவமைக்கப்படுகின்றது. 

images/content-image/1772123952.jpg

மக்கள் மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தியே எமது அரசியல் நோக்கம் என்பதற்கான இன்னொரு உறுதியான அடையாளமாக இதை நான் பார்க்கிறேன்.

மலையாளபுரம் மக்களின் வரவேற்பு மிகுந்த அன்பும் உற்சாகமும் நிரம்பியதாக இருந்தது. இந்தப் பகுதி மக்களை நான் பல வருடங்களாக நன்கு அறிந்தவன். 

images/content-image/1772123970.jpg

அவர்களுடன் கொண்டுள்ள உறவு ஒரு அரசியல் தொடர்பை விட மேலானது, அது நம்பிக்கையாலும், பகிர்ந்த அனுபவங்களாலும், ஒன்றிணைந்த முன்னேற்றக் கனவாலும் கட்டியெழுப்பப்பட்ட உறவாகும்.

அந்த நம்பிக்கையை மதித்து, மலையாளபுரம் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4