டெல்லியில் கர்ப்பிணி மனைவி மற்றும் மகள்களை கொன்ற நபர்

#India #Murder #Delhi #Pregnant #family
Prasu
6 hours ago
டெல்லியில் கர்ப்பிணி மனைவி மற்றும் மகள்களை கொன்ற நபர்

டெல்லியில் நபர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்த முன்சுன் கேவட், தனது 27 வயது மனைவி அனிதா மற்றும் ஐந்து, நான்கு மற்றும் மூன்று வயதுடைய 3 பெண் குழந்தைகளை இவ்வாறு கொலை செய்துள்ளார்.

முதல்கட்ட விசாரணையில் முன்சுன் கேவட், தனது மனைவி மற்றும் மகள்களுக்கு போதை மருந்து கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியதாக தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கு திருமணத்தை மீறிய உறவு காரணமா அல்லது ஆண் குழந்தை இல்லாதது காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!