வறுமைக் கோட்டில் முதல் இடத்தை பிடித்த கொழும்பு மாவட்டம்!!

#SriLanka #Colombo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
வறுமைக் கோட்டில் முதல் இடத்தை பிடித்த கொழும்பு மாவட்டம்!!

இலங்கையின் அதிகாரபூர்வ வறுமைக் கோடு 2025 ஆம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் ஒட்டுமொத்த வறுமைக் கோடு, டிசம்பர் 2025இல் 16,658 இலிருந்து ஜனவரி 2026 இல் 16,730 ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு மிக உயர்ந்த வறுமைக் கோட்டைப் பதிவு செய்துள்ளது.  2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 18,044 ஆகவும் டிசம்பர் மாதத்தில், 17,966 ஆகவும் பதிவாகியுள்ளது. 

கொழும்பின் அண்டை மாவட்டமான கம்பஹா மாவட்டம் ரூ. 17,951 வறுமைக் கோட்டுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து நுவரெலியா ரூ. 17,593 வறுமைக் கோட்டுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 

மொனராகலை, கிளிநொச்சி மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிற மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 

அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு என்பது உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட ஒரு தனிநபர் அல்லது குடும்பத்திற்குத் தேவையான குறைந்தபட்ச வருமானத்தைக் குறிக்கிறது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4