இன்றைய ராசிபலன் (26.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: முயற்சி வெற்றியாகும் நாள். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனால் எடுக்கும் வேலைகள் எளிதாக முடியும். பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வெளியூர் பயணம் லாபம் தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் விருப்பமறிந்து செயல்படுவீர்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணவரவு திருப்தி தரும். ரோகிணி: நேற்றைய நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மிருகசீரிடம் 1,2: மனம் தெளிவாகும். வியாபாரத்தில் பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளிப்பீர்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருவாதிரை: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சியில் எச்சரிக்கைத் தேவை. புனர்பூசம் 1,2,3: வியாபாரிகள் கவனமுடன் இருப்பது நல்லது. நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.
கடகம்
புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் ஏற்படும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும். பூசம்: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர். வேலையில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.
சிம்மம்
மகம்: நினைப்பது நடக்கும். தடைபட்ட வருவாய் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு. உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். நிதிநிலை உயரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
கன்னி
உத்திரம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். அஸ்தம்: பணிபுரியும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். விருப்பம் நிறைவேறும். உடல்நிலை சீராகும். சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். மற்றவர்கள் உதவியால் விருப்பம் நிறைவேறும்.
துலாம்
சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். பணத்தில் இருந்த தடை விலகும். சுவாதி: விஐபி களை சந்திப்பீர். நேற்று திட்டமிட்டிருந்த வேலையில் இன்று லாபமடைவீர். பழைய பிரச்னை முடியும். விசாகம் 1,2,3: நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். தடைகளைத்தாண்டி நினைத்ததை அடைவீர்.
விருச்சிகம்
விசாகம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். அனுஷம்: ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பிரச்னை தேடிவரும். கேட்டை: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். தேவையற்ற பயம் உண்டாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு
மூலம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்ட வேலை முடியும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம்: நண்பர்கள் ஆதரவால் தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் உயரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உத்திராடம் 1: நேற்றிருந்த சங்கடம் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். திருவோணம்: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும். செய்து வரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். பணியாளர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு உண்டு.
கும்பம்
அவிட்டம் 3,4: தடுமாற்றத்திற்கு ஆளாகும் நாள். அவசர முடிவால் நெருக்கடியை சந்திப்பீர். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். சதயம்: பணிபுரியும் இடத்தில் பிரச்னை தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர். பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
மீனம்
பூரட்டாதி 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.
உத்திரட்டாதி: தாய்வழி உறவுகளால் நன்மை நடக்கும் நாள். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உடல் சோர்வடையும்.
ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். சகபணியாளர்களுடன் நிதானம் காப்பது நல்லது.
(வீடியோ இங்கே )