யாழில் முன்னாள் அமைச்சரால் கௌரவிக்கப்பட்ட உள்ளூர் கலைஞர்!

#SriLanka #Jaffna #Minister #artist #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
யாழில் முன்னாள் அமைச்சரால் கௌரவிக்கப்பட்ட உள்ளூர் கலைஞர்!

யாழ். மாவட்டத்தின் கலை, கலாசார உயர்ச்சிக்காகவும், மக்களின் கலாசார மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றியமைக்காக கலாபூசணம் விருது பெற்ற வேலாயுதம் நந்தகுமார் (அண்ணாவியார்) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் பிறந்து வாழ்ந்து தனது பிரதேசத்தில் "வேணுகான சபா மன்றத்தின்" ஊடாக கலை கலாசார பண்பாடுகளை வளர்த்து பாதுகாத்து வந்த அண்ணாவியார் கிராமிய நாடக இசைத்துறையில் இத்துறைசார்ந்த பல தரப்பட்டவர்களால் பல்வேறு விருதுகளை பெற்றுக் கௌரவிக்கப்பட்டிருந்தார் 

இந்நிலையில் தற்போது அண்ணாவியாருக்கு குறித்த துறையின் அதி உச்ச விருது துறைசார் அமைச்சினால் வழங்கப்படு கௌரவிக்கப்பட்டுள்ளமைப் குறிப்பிடத்தக்கது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4