ரணிலை சந்தித்த எதிர்கட்சி தலைவர்கள் - சமகால அரசியல் குறித்து கலந்துரையாடல்!

#SriLanka #Meeting #Ranil wickremesinghe #Politician
Thamilini
1 hour ago
ரணிலை சந்தித்த எதிர்கட்சி தலைவர்கள் - சமகால அரசியல்  குறித்து கலந்துரையாடல்!

எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு ஒன்று இன்று (25) காலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உயர்மட்டக் கூட்டமொன்றை நடத்தியுள்ளன. 

இதன்போது எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. 

கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் மற்றும் தற்போதைய நிலக்கரி கொள்முதல் சர்ச்சை, பாதாள உலகக் கொலைகள் மற்றும் எரிவாயு விநியோக நெருக்கடி உள்ளிட்ட தேசிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜி.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அதுகோரளே உள்ளிட்ட பல மூத்த அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!