ஈரானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நால்வர் மரணம்
#Death
#Accident
#Iran
#Helicopter
#Military
Prasu
2 months ago
மத்திய ஈரானில் உள்ள காய்கறி சந்தையில் ஈரானிய இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோர்ச்சே நகரில் இந்த விபத்து நடந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. விமானி மற்றும் துணை விமானி விபத்தில் இறந்தனர்.
(வீடியோ இங்கே )