டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து
#Pakistan
#T20
#Cricket
#WorldCup
#England
Prasu
3 hours ago
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
அதில் நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணி சார்பில், பாபர் அசாம் மற்றும் பகர் ஜமான் ஆகியோர் தலா 25 ஓட்டங்கள் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.1 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது.
சிறப்பாக விளையாடிய ஹேரி புரூக் 50 பந்துகளில் 100 ஓட்டங்கள் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
(வீடியோ இங்கே )