தென்னை பயிர்ச்செய்கையாளர்களுக்கு 12 இலட்சம் நீர்ப்பாசன மானியம் வழங்கல்!

#SriLanka #Coconut #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
தென்னை பயிர்ச்செய்கையாளர்களுக்கு 12 இலட்சம் நீர்ப்பாசன மானியம் வழங்கல்!

மூதூர் தென்னை அபிவிருத்தி காரியாலயப் பிரிவுக்குட்பட்ட 25 தென்னை பயிர்ச்செய்கையாளர்களுக்கான நீர்ப்பாசன மானியக் கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு இன்று (24) மூதூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம். சிபான் தலைமையில் நடைபெற்ற இந்நீர்ப்பாசன மானிய வழங்கும் திட்டம் பல்வேறு நோக்கங்களை கொண்டுள்ளது. தென்னை பயிர்ச்செய்கை சபையினால் தென்னை பயிர்ச்செய்கையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இவ்வாறான மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று 25 பயனாளிகளுக்கு, மொத்த மானியத் தொகையாக ரூபா 1,240,000/- (பன்னிரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா) வழங்கி வைக்கப்பட்டது.

சம்பூர், தோப்பூர், கிளிவெட்டி, மூதூர் மற்றும் முன்னம்பொடிவெட்டை ஆகிய கமநல பிரிவுகளில் உள்ள பயனாளர்களுக்கு இந்த மானியம் வழங்கியது. இது 2025ஆம் ஆண்டுக்கான மானியக் கொடுப்பணவாகும்.

வறட்சி காலங்களில் தென்னை பயிர்ச்செய்கையைப் பாதுகாக்கவும், சிறந்த விளைச்சலைப் பெற்றுக்கொள்ளவும் இம்மானியங்கள் விவசாயிகளுக்குப் பெரும் உதவியாக அமையும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக பிரதான சமூர்த்தி முகாமையாளர், தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர், தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4