நாட்டை விட்டு விலகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
நாட்டை விட்டு விலகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (23) முதல் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் மழையுடனான வானிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 வானிலை ஆய்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யும். 

 பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4