இன்றைய ராசிபலன் (23.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (23.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் தடை உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும். பரணி: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வாடிக்கையாளரின் வருகை மனச்சோர்வை போக்கும். கார்த்திகை 1: புதிய முதலீட்டில் கவனம் தேவை. பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அவசர வேலைகளால் நெருக்கடி ஏற்படும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திடீர் செலவு தோன்றும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பயணம் ஏற்படும். ரோகிணி: எடுத்த வேலை கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். மனம் தெளிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வந்தாலும் பழைய பிரச்னை மீண்டும் தோன்றி உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைகளை பிறரிடம் வேண்டாம்.

கடகம்

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும். பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னை விலகிப்போகும். அணுகுமுறையால் நினைத்ததை சாதிப்பீர். ஆயில்யம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை செய்து முடிப்பீர்.

சிம்மம்:

மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். முயற்சி லாபமாகும். விருப்பம் நிறைவேறும். பூரம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னை வாசல் கதவைத்தட்டும். நிலைமைகளை சமாளிப்பீர். உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய பொருட்கள் வாங்குவீர். வெளியூர் பயணம் லாபம் தரும். 

கன்னி 

உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த வேலை இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். அஸ்தம்: எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். சிரமங்கள் சூழும். வேலைபளு அதிகரிக்கும். பொறுமை காப்பது நல்லது. சித்திரை 1,2: முயற்சியில் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். 

துலாம்

சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். விருப்பம் நிறைவேறும். மனத்தெளிவு ஏற்படும். சுவாதி: வியாபாரத்தில் நேரடி கவனம் தேவை. என்றோ ஏற்பட்ட பிரச்னை ஒன்று மீண்டும் விசுவரூபம் எடுக்கும். விசாகம் 1,2,3: புதிய பொருட்கள் வாங்குவீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

விருச்சிகம் 

விசாகம் 4: நினைப்பது நடக்கும். நேற்றைய முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். இழுபறி விவகாரம் சாதகமாகும். அனுஷம்: மறைமுகமாக தொல்லைக் கொடுத்தவர் விலகிச்செல்வர். உடல், மனநிலை சீராகும். வருமானம் உயரும். கேட்டை: வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சேமிப்பு உயரும். வழக்கு சாதகமாகும்.

தனுசு 

மூலம்: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். நினைத்ததை சாதிப்பீர். பூராடம்: செயல்களில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகள் நலனில் அதீத அக்கறை உண்டாகும். உத்திராடம் 1: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். திருவோணம்: ஒரு சில வேலைகளில் போராடி வெற்றி காண்பீர். உழைப்பிற்கேற்ற வருமானம் உண்டாகும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம் 

அவிட்டம் 3,4: யோகமான நாள். முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சதயம்: எதிரிகள் கை ஓங்கும். அனைத்தையும் சமாளித்து வெற்றி அடைவீர். வேலை எளிதாக நடக்கும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஏற்ற வேலையை முடித்துக் கொடுப்பீர். எதிர்பார்த்த பணம் கேட்ட இடத்தில் வரும். 

மீனம்

பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர். செல்வாக்கு உயரும் நாள். உத்திரட்டாதி: உறவுகளிடம் கோபம் காட்டாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும். ரேவதி: நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். வீட்டில் புதிய பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!