விரைவில் புதிய வரிகள் அறிவிக்கப்படும் - எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

#America #Country #Warning #World #HighCourt
Prasu
4 months ago
விரைவில் புதிய வரிகள் அறிவிக்கப்படும் - எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீனா உள்பட 75க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.

சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977ன் கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த அமெரிக்க உயர் நீதிமன்றம், ஜனாதிபதி டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது. 

இதனால் டிரம்ப்பின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், குறுகிய காலத்தில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4