இன்றைய ராசிபலன் (22.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (22.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் வேலைகளில் குழப்பம் ஏற்படும். பரணி: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்திலும் எடுத்த வேலைகளிலும் லாபம் உண்டாகும். கார்த்திகை 1: வியாபாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். பெரிய அளவிலான முதலீடு, வேலை இன்று வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று எதிர்பாராத செலவு தோன்றும். ரோகிணி: கடன் கொடுப்பதை முடிந்த வரை தவிர்க்கவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும். மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினரால் சங்கடங்களுக்கு ஆளாவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூசம்: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். ஆயில்யம்: இழுபறி வேலையைப் போராடி முடிப்பீர். சொந்த வேலையாக ஒருசிலர் பயணம் மேற்கொள்வீர்.

சிம்மம்

மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். பெரியோர் ஆதரவால் வேலைகள் முடியும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூரம்: தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்திரம் 1: குடும்ப நெருக்கடி நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக நண்பர்களுடன் ஆலோசனை மேற்கொள்வீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சிகளில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். அஸ்தம்: தேவையற்ற பிரச்னை வரும். வியாபாரத்தில் தடை இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். சித்திரை 1,2: வாகனப் பயணத்திலும் இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்த்த உதவி வருவதில் தாமதம் ஏற்படும்.

துலாம்

சித்திரை 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். நண்பர்கள் உதவியுடன் வேலை நடக்கும். சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். முயற்சியில் எதிர்பார்த்த தகவல் வரும். விசாகம் 1,2,3: பதட்டத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: ஆதாயமான நாள். தடைகளைத் தாண்டி அனைத்திலும் வெற்றி காண்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். எதிர்ப்பு விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கேட்டை: மற்றவரால் முடியாத வேலையை முடிப்பீர். போட்டியாளர் விலகுவர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

தனுசு

மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பூராடம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வெளியூர் பயணம் லாபம் தரும். உத்திராடம் 1: ராகுவால் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எடுத்த வேலை வெற்றியாகும். மனக்குழப்பம் விலகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் வழியே லாபம் காண்பீர். பயணம் நன்மை தரும். திருவோணம்: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும். திடீர் செலவு ஏற்படும். அவிட்டம் 1,2: எடுத்த வேலை இழுபறியாகும். குடும்ப நெருக்கடி குறையும். யோசித்து செயல்படுவது நல்லது.

கும்பம்

அவிட்டம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டு. சதயம்: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். நினைத்ததை சாதிப்பீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பூரட்டாதி 1,2,3: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். எதிர்பார்த்த தகவல் வரும். 

மீனம்

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். தெளிவாக செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். உத்திரட்டாதி: நேற்றைய விருப்பம் நிறைவேறும். பணம் வரும். விட்டுக் கொடுத்து செயல்படுவீர். ரேவதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!