அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது

#SriLanka #Arrest #Murder #GunShoot #Lawyer
Prasu
3 months ago
அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து சென்ற நபர் ஒருவர் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த அவர், இந்தக் கொலையை வழிநடத்தியதாகக் கூறப்படும் ‘கரந்தெனிய சுத்தா’ எனப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகா என பொலிஸார் கூறுகின்றனர்.

இதற்கமைய, துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற காரும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்காக வாடகைக்கு பெறப்பட்ட காரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4