காத்திருந்த பயணிகள் மீது மோதிய பேருந்து.!பலியான தாய்

#SriLanka #Colombo #Accident #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
காத்திருந்த பயணிகள் மீது மோதிய பேருந்து.!பலியான தாய்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள யட்டியாந்தோட்டை, கிராசிவத்த பகுதியில் நேற்று (20) ஒரு பேருந்து, வீதியோரம் பேரூந்துக்காக காத்திருந்த தாய் மற்றும் பிள்ளைகள் மீது மோதியதில், தாய் உயிரிழந்ததோடு அவரது மூன்று பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர் யட்டியாந்தோட்டை கிராசிவத்தையை சேர்ந்த ஆதி ராஜசிங்க மேள சதுராணி என்கின்ற மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தில் பயணித்த இரண்டு இந்தியர்களும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!