இரண்டு பிள்ளைகளின் தாய் கணவரால் வெட்டிக்கொலை!

#SriLanka #Letters #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
இரண்டு பிள்ளைகளின் தாய் கணவரால் வெட்டிக்கொலை!

குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதுடைய கணவர், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, ஆத்திரமடைந்த கணவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை வெட்டியுள்ளார்.

பாரிய வெட்டுக் காயங்களுக்குள்ளான அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் விசேட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4