உலகளாவிய இறக்குமதிகள் மீது 10 சதவீதம் வரி விதித்தார் ட்ரம்ப்!

#SriLanka #Import #Tax #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
உலகளாவிய இறக்குமதிகள் மீது 10 சதவீதம் வரி விதித்தார் ட்ரம்ப்!

உலகளாவிய இறக்குமதிகள் மீது 10 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

 ட்ரம்பின் வரிக் கொள்கைக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. 

ஜனாதிபதி டிரம்பின் ஒருதலைப்பட்ச உலகளாவிய வர்த்தக வரிகள் கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக நீதிமன்ற தீர்ப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய அவசரநிலைகளுக்காக ஒதுக்கப்பட்ட சட்டத்தின் மூலம் வரிகளை விதிப்பதன் மூலம் ட்ரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

இருப்பினும் ட்ரம்ப் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய வரிகளை விதித்துள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4