இன்றைய ராசிபலன் (21.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (21.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: உழைப்பால் உயர்வு காண்பீர். நேற்றைய பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பரணி: செலவு அதிகரிக்கும். எடுக்கும் வேலையில் நன்மை உண்டு. அவசியமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவீர். கார்த்திகை 1: வரவு செலவில் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைத்தது நடத்தி லாபம் காணும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும். ரோகிணி: வழக்கமான வேலைகளில் லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மிருகசீரிடம் 1,2: எடுத்த வேலை எளிதாக நடக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும். புதிய முயற்சி வேண்டாம். திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி சரியாகும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

கடகம்

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பெரியோர் உங்கள் வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும். பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். போராட்ட நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். ஆயில்யம்: திட்டமிட்டபடி உங்கள் வேலை நடக்கும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

சிம்மம்

மகம்: இன்று மாலை வரை உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் இருக்கும். அதன்பின் நிலைமை சீராகும். பூரம்: கவனமாக செயல்படுவதால் நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகள் இன்று மாலை வரை வேண்டாம். உத்திரம் 1: நெருக்கடியிலும் நன்மை அடைவீர். எதிர்பாராத பிரச்னை தோன்றினாலும் அதையெல்லாம் சமாளித்து லாபம் காண்பீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்றைய வேலைகள் லாபமாகும். எதிர்பார்த்த இடத்தில் உதவி கிடைக்கும். அஸ்தம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நண்பர்கள் ஒத்துழைப்பால் தடைபட்ட வேலை நடக்கும். சித்திரை 1,2: தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.சுப நிகழ்ச்சி ஒன்றிற்காக உறவினர் அனைவரும் ஒன்றிணைவீர்.

துலாம்

சித்திரை 3,4: யோகமான நாள். தடைகளைத் தாண்டி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை சீராகும். சுவாதி: தொழில் போட்டியாளர்கள் பலம் இழப்பர். இழுபறியாக இருந்த வேலை முடியும். நண்பர்களால் முயற்சி வெற்றியாகும். விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். வாக்கு பலிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: நன்மையான நாள். குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். சந்திக்க நினைத்த வரை சந்திப்பீர். அனுஷம்: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். கேட்டை: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.சொத்துக்காக மேற்கொண்ட முயற்சி தள்ளிப் போகும்.

தனுசு

மூலம்: வேலைபளு அதிகரிக்கும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். முயற்சியில் வெற்றி காண்பீர். பூராடம்: நண்பர்கள் ஆதரவு நன்மை தரும். பணிபுரியும் இடத்தில் கொடுத்த வேலையை முடித்து காட்டுவீர். உத்திராடம் 1: வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருவோணம்: வரவேண்டிய பணம் வரும். தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவிட்டம் 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலை திட்டமிட்டபடி நடக்கும். தக்க சமயத்தில் உதவி கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள்.எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும். சதயம்: வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். பூரட்டாதி 1,2,3: நினைத்ததை நடத்தி முடிப்பீர். உறவினர்கள் வீடுதேடி வருவர். செய்து வரும் தொழில் லாபமாகும்.

மீனம்

பூரட்டாதி 4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். துணிச்சலாக எடுத்த வேலைகளை முடிப்பீர். உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடியும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகள் மாலையில் நடக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!