சர்ச்சைகளுக்கு மத்தியில் தனுஷ் குறித்து கருத்து தெரிவித்த நடிகை மிருணாள் தாக்கூர்

#Actor #Actress #TamilCinema #wedding #Movie
Prasu
3 hours ago
சர்ச்சைகளுக்கு மத்தியில் தனுஷ் குறித்து கருத்து தெரிவித்த நடிகை மிருணாள் தாக்கூர்

நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2004ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு தற்போது இளம் வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அறிவித்தனர். 

கடந்த சில மாதங்களாக தனுஷும் நடிகை மிருணாள் தாகூரும் ஒன்றாக காணப்பட்டதால் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், தனது ’தோ திவானே சேஹர் மெயின்’ என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்ற மிருணாள் தாக்கூர் “ ராயன், மாரி, ராஞ்சனா, கேப்டன் மில்லர், அசுரன் படங்களைப் பார்த்தபிறகு நான் தனுஷின் மிக மிகப் பெரிய ரசிகையாக மாறினேன். 

அவர் ஒரு பல்கலைக்கழகம். அவர் ஒரு பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடனமாடுபவர், நடிகர், இயக்குநர் ஆகவும் இருக்கிறார். தனுஷ் சார் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். 

அவரிடம் எனது ‘சன் ஆப் சர்தார் 2’ படத்தின் திரையிடலுக்கு வர முடியுமா எனக் கேட்டேன். அவர் வருவாரென நான் நினைக்கவில்லை.

அவர் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நிஜமாகவே அவரிடன் ஒருநாள் நடிக்க வேண்டுமென மிகவும் விரும்புகிறேன் ” என்று மிருணாள் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!