அக்குரேகொடை இரட்டை கொலை துப்பாக்கிதாரி அடையாளம்! பாதாள குழுவினருடன் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள்!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
அக்குரேகொடை இரட்டை கொலை துப்பாக்கிதாரி அடையாளம்! பாதாள குழுவினருடன் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை இன்று (20) இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பத்மே உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவர்களிடம் இருந்த 30 தொலைபேசிகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணைகளின் பின்னர் இது குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4