தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றமா? நிலவரத்தை வெளியிட்ட மத்திய வங்கி

#SriLanka #Bank #Gold #Changes #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றமா? நிலவரத்தை வெளியிட்ட மத்திய வங்கி

தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றம் இல்லையென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏற்கனவே தங்கக் கடன்களுக்கு மூலதனக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் நிதி நிறுவனங்கள் தமக்கான பாதுகாப்பு வரம்புகளை சுயமாகவே பின்பற்றி வருவதால், புதிய கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

கடந்த 2000ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கம் 284 டொலராக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 5,000 டொலர் வரை உயர்ந்துள்ளது.

அண்மையில் இதன் விலை 5,500 டொலர் வரை உயர்ந்து, பின்னர் சற்று வீழ்ச்சியடைந்து தற்போது 5,000 டொலர் மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4