ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு
#Actor
#TamilCinema
#Kamal
#Movie
#RAJINIKANTH
Prasu
1 hour ago
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில்டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இந்த படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை மதியம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வீடியோ இங்கே )