பிரபல கன்னட நடிகை ரஷ்மி லீலா 37 வயதில் காலமானார்

#Death #Actress #Hospital #Kannada
Prasu
4 hours ago
பிரபல கன்னட நடிகை ரஷ்மி லீலா 37 வயதில் காலமானார்

காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர்களில் நடித்த கன்னட நடிகை ரஷ்மி லீலா 37 வயதில் காலமானார்.

ரஷ்மி லீலா கடந்த 2019ம் ஆண்டு முதல் நுரையீரல் பைப்ரோ சிஸ் என்ற நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த ரஷ்மி லீலா மீண்டும் படப்பிடிப்புக்கு வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் இருந்த நிலையில் ரஷ்மி லீலா சிகிச்சை பலனின்றி காலமானார். 

இது குறித்து ரஷ்மி லீலா கணவர் சரிக்குமஞ்சு வெளியிட்டுள்ள பதிவில், என் மனைவி ரஷ்மி லீலா நுரையீரல் பைப்ரோசியுடன் சில ஆண்டுகளாக போராடினார். 

சமீபத்தில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த போது உடல்நிலை மோசமடைந்து துரதிர்ஷ்டவசமாக நேற்று உயிரிழந்தார். 

அவரது இறுதிச் சடங்கு இன்று பனசங்கரி மின் மயானத்தில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!