சீரற்ற வானிலையானது வரும் 24 ஆம் திகதிவரை தொடரும் - நாகமுத்து பிரதீபராஜா!
நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் மழையானது எதிர்வரும் 24 ஆம் திகதிவரை தொடரும் என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை குறித்து தனது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போது இலங்கைக்கு தெற்காக நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி குறிப்பாக மாலைதீவுகள்/ குமரிக் கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக உருவாகும் வாய்ப்புள்ளது. இது இலங்கையின் கிழக்கு கரையோரமாக, வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதி வடக்கு மாகாணத்தை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 24.02.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் கன மழை 23.02.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்திலும் நாளை (19.02.2026) மழை சற்று குறைவடைந்தாலும் மீளவும் 20.02.2026 சற்றுக் கனமழை கிடைக்க தொடங்கும்.
குறிப்பாக 21 மற்றும் 22 ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்