வியாழேந்திரனின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
வியாழேந்திரனின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.

 நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை மாத்திரம் இந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  பயணத்தடையை நீக்குவதற்காக, நெருங்கிய உறவினர் ஒருவரின் மேலதிக சரீரப் பிணையை நிர்ணயித்துள்ள நீதிமன்றம் அவரின்  வெளிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

 தனிநபர் ஒருவருக்கு மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுப்பதற்காக 15 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்றமைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே எஸ்.வியாழேந்திரனுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு,பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4