இன்றைய ராசிபலன் (18.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: நினைத்ததை நடத்தி லாபம் காணும் நாள். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வராத பணம் வரும். கடன்களை அடைப்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். ரோகிணி: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் புதிய முயற்சி இன்று வேண்டாம். மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். திருவாதிரை: பழைய பிரச்னை முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி குறையும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
கடகம்
புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் தடை உண்டாகும். பூசம்: முயற்சி இழுபறியாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும். ஆயில்யம்: சிறு சிறு நெருக்கடிக்கு ஆளாவீர். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் விலகும்.
சிம்மம்
மகம்: மகிழ்ச்சியான நாள். விருப்பம் பூர்த்தியாகும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். பூரம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலை நடக்கும். பிறரை அனுசரித்துச் செல்வீர்.
கன்னி
உத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர். அஸ்தம்: விழிப்புடன் செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். முயற்சி லாபமாகும். சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலையில் முடிவு காண்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு உயரும்.
துலாம்
சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காண்பீர்கள். நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். சுவாதி: செயல்களில் தடை ஏற்பட்டாலும் போராடி வெற்றி பெறுவீர். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
விருச்சிகம்
விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டு. அலைச்சல் அதிகரிக்கும். அனுஷம்: தாய்வழி உறவினருடன் சங்கடம் உண்டாகும். வார்த்தைகளால் சச்சரவு ஏற்படும். நிதானம் தேவை கேட்டை: வரவேண்டிய பணம் வரும். குடும்ப நெருக்கடி விலகும். பொதுவாழ்வில் செல்வாக்கு உயரும்.
தனுசு
மூலம்: முன்னேற்றமான நாள். முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும். பூராடம்: பொது சேவையினருக்கு செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். உத்திராடம் 1: நேற்று முடியாமல் இருந்த வேலை இன்று முடியும். திறமை வெளிப்படும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திருவோணம்: தடைபட்ட வருமானம் மீண்டும் வரும். உங்கள் வேலை எளிதாக நடக்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.
கும்பம்
அவிட்டம் 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். சதயம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விழிப்புடன் செயல்படுவீர். செலவுக்கு ஏற்ப வருமானம் வரும்.
மீனம்
பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.
ரேவதி: புதிய முயற்சி இன்று வேண்டாம். உங்கள் வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.
(வீடியோ இங்கே )