கோப்பாயில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை!

#SriLanka #Police #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
கோப்பாயில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை!

கோப்பாய் அல்லியவத்தை பகுதியில் நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளாார். 

59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்டவருக்கும்  அயலவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 கொலை தொடர்பாக 37 மற்றும் 63 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின்  பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

 சம்பவம் தொடர்பாக மற்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4