கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

#SriLanka #Namal Rajapaksha #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 இன்று (16) நீதிமன்ற கடமைகளில் இருந்து விலகுவதற்கு சட்டத்தரணிகள் முடிவு செய்துள்ளமை காரணமாக இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 எனினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. 

 ரக்பியை ஊக்குவிப்பதற்காக  கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!