வத்தளையில் உயிருடன் இருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதி மீட்பு!

#SriLanka #Police #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
வத்தளையில் உயிருடன் இருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதி மீட்பு!

வத்தளையில் வெடிமருந்துகள் நிரம்பிய பொதியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த வெடிமருந்துகள் செயலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மேற்கு மாகாண குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் இந்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பொதியில்  நான்கு T-56 உயிருள்ள தோட்டாக்கள், நான்கு ரிவால்வர் தோட்டாக்கள், இரண்டு பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் 11 வகையான சிம் கார்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பொல்பகொடை, யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

சந்தேகபருக்கு எதிராக  கல்னேவ, கல்தோட்டை மற்றும் எல்பிட்டிய காவல் பிரிவுகளால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும் அவரை விசாரிக்க 72 மணி நேர தடுப்பு உத்தரவு பெறப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!