மலையக ரயில் சேவைகள் விரைவில் வழமைக்கு திரும்பும்!

#SriLanka #Railway #Train #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
மலையக ரயில் சேவைகள் விரைவில் வழமைக்கு திரும்பும்!

நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து அம்பேவெல வழியாக பதுளை வரை ரயில் சேவைகளை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக நானுஓயா ரயில்வே நிலையம் தெரிவித்துள்ளது.

 மேலும் மலையக மார்க்கத்தின் டிட்வாவுக்கு முந்தைய வழக்கமான ரயில் சேவைகளை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.

 குறிப்பாக நானுஓயா ரயில் நிலையத்திற்கும் ஹட்டன் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்குவது போல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் மீள் கட்டமைப்பு பணிகள் துரிதக் கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை - அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4