நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் சொந்த நாடு செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள் - ஸ்டாலின் அவசர கடிதம்!

#SriLanka #Tamil Nadu #M. K. Stalin #Court Order #Fisherman
Thamilini
2 months ago
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் சொந்த நாடு செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள் - ஸ்டாலின் அவசர கடிதம்!

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்குத் திரும்புவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு இருந்தபோதிலும், திருப்பி அனுப்பும் முறைகளை முடிப்பதில் ஏற்பட்ட தாமதம் மீனவர்கள் தொடர்ந்து காவலில் இருக்க வழிவகுத்ததாக  சுட்டிகாட்டப்பட்டுள்ளது. 

கைதிகள் அனுபவித்த கடுமையான துன்பங்களையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட துயரங்களையும் வலியுறுத்தி, "விடுவிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் திருப்பி அனுப்புவதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஸ்டாலின் குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!