வணிக வெற்றிக்காக அசுரன் படத்தை விட்டுக் கொடுத்த நடிகர் கருணாஸ்
#Actor
#TamilCinema
#Director
#danush
#Movie
Prasu
3 hours ago
2019ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பிரபல திரைப்படம் அசுரன். ஜாதி வெறியோடு மகனை கொன்றவர்களை பழிவாங்கும் அப்பாவாக தனுஷ் நடித்து இருப்பார்.
இந்நிலையில், குறித்த அப்பா கதாபாத்திரத்திற்கு நடிக்க முதலில் என்னை தான் வெற்றிமாறன் கேட்டார் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த திரைப்படத்தில், சிவசாமி கதாபாத்திரத்தில் கருணாஸ் மற்றும் சிதம்பரம் கதாபாத்திரத்தில் அவரது மகன் கென் ஆகியோர் நடிக்க வேண்டும் என வெற்றிமாறன் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
"கதையை கேட்டுவிட்டு அதில் ஒரு பெரிய ஹீரோ நடித்தால் படம் பெரிய ஹிட் ஆகும் என நான் கூறினேன்." "உங்களை வைத்து தான் எடுக்க ஆசை என வெற்றிமாறன் கூறினார்.
ஆனால் அந்த படத்தின் வணிக வெற்றிக்காக நான் விட்டுக்கொடுத்துவிட்டேன்" என கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )